`வெள்ள பாதிப்புகளில் இருந்து கேரளா விரைவில் மீளும்!’ - முதலமைச்சர் பினராயி விஜயன் நம்பிக்கை

வெள்ள பாதிப்பிலிருந்து கேரளா விரைவில் மீண்டுவரும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பினராயி விஜயன்

நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான மழை, வெள்ளத்தை கேரளா எதிர்கொண்டு வருகிறது. மழை, வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட 2 லட்சத்துக்கும் அதிகமானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 360-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அண்டைமாநிலங்கள் முதல் வெளிநாடுகள் வரை கேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன. அம்மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் பினராயி விஜயன் நாள்தோறும் செய்தியாளர்களைச் சந்தித்து சூழலை விளக்கி வருகிறார்.

அந்தவகையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``கேரளாவில் இன்று மட்டும் 13 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ள பாதிப்பால் 5 லட்சம் பேர் இருப்பிடங்களை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். 22,034 பேர் மீட்கப்பட்டுள்ளனர். வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ள பகுதிகளில், சில இடங்களில் வெள்ளம் வடிந்துள்ளதால் அங்கு மின்விநியோகம் அளிப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம். வெள்ளம் வடிந்தால்தான் முழுமையான சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ள முடியும். வெள்ள பாதிப்பில் இருந்து கேரளா விரைவில் மீளும்'' என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!