மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள மீனவர்களை நெகிழவைத்த கேரள முதல்வர் பினராயி விஜயன்!

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்பொழுது மழை சற்று ஓய்ந்திருப்பதால் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மக்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் குழு, இந்தியக் கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவை ஈடுபட்டு வருகின்றன. ஆனால், அவர்கள் வருவதற்குக் காத்திருக்காமல் விரைவாகக் களத்தில் இறங்கி மக்களுக்கு உதவத் தொடங்கி விட்டார்கள் மீனவர்கள்.

மீனவர்கள்

அவர்களின் படகுகளின் மூலமாக நிவாரணப் பொருள்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது, வெள்ளத்தில் சிக்கியிருப்பவர்களை மீட்டுப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வது  எனப் பல வகைகளில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.  தாங்களாகவே முன்வந்து இந்தச் சேவையை செய்து வருகிறார்கள் மீனவர்கள். இந்நிலையில் மீனவர்களின் சேவையை கௌரவிக்கும் விதமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.

பினராயி விஜயன்

அதன்படி மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் ஒவ்வொரு படகுக்கும் தினமும்  3,000 ரூபாய் வழங்கப்படும் என்றும், மீட்புப் பணிகளின்போது சேதமடைந்த படகுகளைப் பழுது பார்ப்பதற்கான செலவுகள் அனைத்தையும் அரசே ஏற்றுக்கொள்ளும் எனக் கேரள முதல்வர்  அறிவித்திருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!