வெளியிடப்பட்ட நேரம்: 05:45 (20/08/2018)

கடைசி தொடர்பு:08:31 (20/08/2018)

ரூபாய் 10 லட்சம் கோடியாக அதிகரித்த வருமான வரி வசூல்!

வருமான வரித்துறை

நடப்பு நிதியாண்டில் ரூ.10.03 லட்சம் கோடி வருமான வரி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. கடந்த 2017-18 -ம் நிதியாண்டில் சாதனை அளவாக ரூ.6.92 லட்சம் கோடி வருமான வரி ரிட்டன் பைல் செய்யப்பட்டுள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டைவிட 1.31 லட்சம் கோடி (5.61 லட்சம் கோடி)  அதிகமாகும். 2017-18-ம் நிதியாண்டில் 1.06 கோடி பேர் புதிதாக வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்துள்ளனர். நடப்பு நிதியாண்டில் 1.25 கோடி பேர் புதிதாக வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்ய வருமானவரித்துறை திட்டமிட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் 1.89 லட்சம் பேர் புதிதாக வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்துள்ளனர்.

இதே நிதியாண்டில்  வடகிழக்கு மாநிலங்களிலிருந்து வசூல் செய்யப்பட்ட வருமானவரி 16.7 சதவிகிதம் உயர்ந்து ரூ.6,082 கோடியிலிருந்து ரூ.7,097 கோடியாக வளர்ச்சி கண்டுள்ளது. நடப்பு நிதியாண்டுக்கு ரூ.8,357 கோடி வரி வசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இதற்கு முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும்போது  17.75 சதவிகிதம் அதிகமாகும்.