`நாம் இணைந்திருந்த நிமிடங்கள் நினைவுக்கு வருகிறது’ - தந்தைக்காக உருகும் ராகுல் காந்தி

`நாம் இணைந்திருந்த நிமிடங்கள் என் நினைவுக்கு வருகிறது, பல பிறந்தநாள்களை உங்களுடன் கொண்டாடும் அதிர்ஷ்டம் பெற்றிருந்தோம்’ என தந்தை ராஜீவ் காந்தி குறித்து நினைவுகளை ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார். 

ராகுல் காந்தி

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 74-வது பிறந்த நாள் இன்று. இதனால் டெல்லியில் உள்ள அவரது நினைவிடம் வெள்ளை நிற மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்கு ராஜீவ் காந்தியின் மனைவியும் காங்கிரஸின் முன்னாள் தலைவருமான சோனியா காந்தி, மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டவர்கள் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். 

இதையடுத்து தந்தை பிறந்த நாளில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன் ட்விட்டரில் வெளியிட்டுள்ள கருத்தில், “ ராஜீவ் காந்தி மிகவும் மென்மையானவர். அதிக பாசமிக்கவர். அவரின் அகால மரணம் என் வாழ்க்கையில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டது. நாங்கள் இணைந்திருந்த தருணங்கள் என் நினைவுக்கு வருகிறது. அவர் உயிருடன் இருக்கும்போது அவருடன் இணைந்து பல பிறந்த நாள்களை கொண்டாடும் அதிர்ஷ்டம் பெற்றிருந்தோம். அவரை விட்டுப் பிரிந்திருந்தாலும் என்றும் எங்கள் நினைவுகளில் வாழ்கிறார்” எனப் பதிவிட்டுள்ளார். 


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!