காலதாமதமாக வழங்கப்பட்ட தொலைபேசி இணைப்பு..! பி.எஸ்.என்.எல்லுக்கு 5 ஆயிரம் அபராதம் விதித்த நீதிமன்றம்

 பி.எஸ்.என்.எல்

குஜராத் மாநிலம் வதோதரா நகரின் நுகர்வோர் நீதிமன்றம், தொலைபேசி இணைப்பு தர காலதாமதம் செய்ததால் பாதிக்கப்பட்ட நபருக்கு 5,000 ரூபாய் இழப்பாக வழங்க பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

ஜக்தே ரஹோ என்ற மாநிலக் கட்சியின் தலைவராகிய பர்ஃபுல் தேசாய் சில ஆண்டுகளுக்கு முன் பி.எஸ்.என்.எல் நிறுவனத்திடம் ஒரு தொலைபேசி இணைப்புக்காக விண்ணப்பித்திருக்கிறார். விண்ணப்பித்த சிலநாள்களிலேயே தேவையான தொலைபேசி சாதனங்கள் அவரது ராவ்புரா வீட்டில் பொருத்தப்பட்டன. இருப்பினும், தொலைபேசி இணைப்பு சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகுதான் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தால் கொடுக்கப்பட்டுள்ளது. 

இதற்கு எதிராக நீதிமன்றத்தில், 4.5 லட்சம் ரூபாய் பி.எஸ்.என்.எல் நிறுவனத்திடமிருந்து வசூலிக்கப்பட வேண்டும் என வழக்குத் தொடர்ந்தார் பர்ஃபுல் தேசாய். இத்துடன், ஒரு வாரத்துக்குள் இணைப்புத் தரப்படுமென அந்நிறுவனத்தால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார் அவர். 

இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம் தேசாய்க்கு அளிக்கப்பட்ட சேவை குறைபாட்டுக்கு 5,000 ரூபாய் ஈடாக வழங்கப்பட வேண்டும் என பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு உத்தரவிட்டது வதோதரா மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!