வெள்ளத்தில் சிக்கிய பிரித்விராஜ் தாயாரை அண்டாவில் மீட்டுச்சென்ற மக்கள்! | Mallika Sukumaran crosses flooded street by huge vessel trolled in net

வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (20/08/2018)

கடைசி தொடர்பு:18:20 (20/08/2018)

வெள்ளத்தில் சிக்கிய பிரித்விராஜ் தாயாரை அண்டாவில் மீட்டுச்சென்ற மக்கள்!

டிகர் பிரித்விராஜின் தாயாரும் நடிகையுமான  மல்லிகா சுகுமாரனை இணையவாசிகள் ட்ரோல் செய்துவருகின்றனர். பிரித்விராஜ் ரூ.4 கோடி மதிப்புள்ள லம்போகினி கார் வாங்கியபோது,  திருவனந்தபுரம் சாலைகள் படுமோசமாக உள்ளதாகவும், அதனால் சாலையை சரிசெய்துகொடுக்கும்படியும் கேட்டுக்கொண்டார்  மல்லிகா சுகுமாரன்.

பிரிதிவிராஜ் தாயார் மல்லிகா சுகுமாரன்

மல்லிகா சுகுமாரனின் வீடு திருவனந்தபுரத்தில் உள்ளது. கேரளாவைப் புரட்டிப்போட்ட மழையில், மல்லிகா சுகுமாரனின் பங்காளவுக்குள் வெள்ளம் புகுந்தது. உதவி கேட்டுக் கதறியவரை அருகிலுள்ளவர்கள் மீட்டு, பெரிய அண்டாவில் ஏற்றி வெள்ளத்திலிருந்து மீட்டுக்  கொண்டுசென்றனர். மல்லிகா சுகுமாரனை அண்டாவில் மீட்டுக் கொண்டுவரும் புகைப்படங்கள் இணையத்தில் பரவி  வைரல் ஆகின.

இந்தச் சம்பவம்குறித்து மல்லிகா கூறுகையில், ''வீட்டுக்கு முன் இருந்த களிமண்ணில் என்னால் நடந்துசெல்ல முடியவில்லை. அதனால், சில மீட்டர்கள் தொலைவில் இருந்த பகுதிக்கு அண்டாவில் ஏறிச் சென்றேன். என்னை விமர்சிப்பவர்களைப் பற்றி நான் கவலைகொள்ளவில்லை. உண்மையிலேயே உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவிசெய்யுங்கள். இப்போது நான் பாதுகாப்பாக இருக்கிறேன். மீண்டும் வீட்டுக்கு வந்துவிட்டேன். சமூக வலைதளத்தில் என் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு, என் நலன் விரும்பிகள் போன் செய்தனர். அவர்களுக்கு என் நன்றி '' என்று தெரிவித்துள்ளார். 

மல்லிகா சுகுமாரனுக்கு இந்திரஜித், பிரித்விராஜ் என்கிற இரு மகன்கள். இருவருமே மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகர்கள். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க