பீகார் காப்பகச் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை விவகாரம்..! முன்னாள் பெண் அமைச்சர் மீது வழக்கு பதிவு

பீகார் முன்னாள் அமைச்சர் மஞ்சு வெர்மா மற்றும் அவரின் கணவர் மீது ஆயுத தடுப்புச் சட்டத்தின் கீழ் சி.பி.ஐ வழக்கு பதிவு செய்துள்ளது. 

பீகார் மாநிலம் முசாபர்பூரில் ஒரு காப்பகத்தில் தங்கியிருந்த 40-க்கும் மேற்பட்ட சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ விசாரணையில், இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியுடன் பீகார் சமூக நலத்துறை அமைச்சர் மஞ்சு வெர்மாவின் கணவர் சந்திரசேகருக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது. மேலும், முக்கியக் குற்றவாளி பிரஜேஷ் தாக்கூருடன் சந்திரசேகர் 17 முறை போனில் பேசியது உறுதி செய்யப்பட்டது.

மஞ்சு வெர்மா அமைச்சர் பதிவியிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை மஞ்சு வெர்மாவின் வீடு மற்றும் அவரின் உறவினர்களின் வீடுகளில் சோதனை நடத்தினர். அந்தச் சோதனையில் மஞ்சு வெர்மாவின் வீட்டிலிருந்து 50 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, மஞ்சு வெர்மா மற்றும் அவரின் கணவர் சந்திர சேகர் ஆயுத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!