உடல் நலக்குறைவு காரணமாக லாலு பிரசாத் யாதவ் மருத்துவமனையில் அனுமதி!

லாலு பிரசாத் யாதவ்

ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் தலைவரும் பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் உடல் நலக்குறைவால்  மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, அவர் மகன் தேஜஸ்வி ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தந்தை  லாலு பிரசாத்  யாதவ்  உடல் நலக்குறைவால் ஏற்பட்ட நோய் தொற்று காரணமாக மும்பையில் ஏசியன் ஹார்ட்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய உடல் நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்து  வருகின்றனர். அவர் விரைவில் குணமடைய இறைவனை தொடர்ந்து வேண்டுவதாகக் கூறியுள்ளார். 

சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம், முன்னாள் முதல்வரான லாலு பிரசாத் யாதவுக்கு, கால்நடைத் தீவன முறைகேட்டு வழக்கில் மூன்றரை  ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. இதையடுத்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ம் தேதி சிறைக்குச் சென்றார்.  இதைத்தொடர்ந்து, அவரின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு, கடந்த ஜூன் மாதம் 29-ம் தேதி  ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் கடந்த 17-ம் தேதி வரையில் ஆறு வாரக் காலத்துக்கு ஜாமீன் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!