திருச்சூரில் வீட்டுக்குள் குடியேறிய முதலை!

கேரள மாநிலம் திருச்சூர் சாலக்குடியில் மழை வெள்ளம் வடிந்த வீட்டுக்குள் பதுங்கி இருந்த முதலையை இளைஞர்கள் பிடித்தனர்.

முதலை

கேரளாவில் ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் இருந்தே கனமழை பொழியத் தொடங்கியது. தொடர் மழையின் காரணமாக அனைத்து அணைகளும் நிரம்பின. இதனால் அங்குள்ள 80 அணைகளின் மதகுகளும் திறக்கப்பட்டன. அணைகள் திறப்பு மற்றும் அடைமழை ஆகிய இரண்டும் சேர்ந்து கேரளாவைப் புரட்டிப்போட்டுள்ளது. கனமழை காரணமாக கேரள மாநிலமே வெள்ளத்தில் மிதக்கிறது. செங்கனூர், குட்டநாடு, பாண்டநாடு, பந்தளம் உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் தண்ணீர் வடியவில்லை. தண்ணீர் வடிந்த பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் சில அடி உயரத்துக்குச் சேறும், சகதியும் நிறைந்துள்ளன. பாதுகாப்பு இல்லாமல் வீடுகளைச் சுத்தம் செய்ய வேண்டாம் என்றும், தீயணைப்புத்துறையினர் உதவியுடன் வீடுகளை சுத்தம் செய்யும்படியும் கேரள அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த நிலையில் கேரள மாநிலம் சாலக்குடியில் ஒரு வீட்டைச் சுத்தம் செய்யும்போது முதலைப் பதுங்கி இருந்துள்ளது. அந்த பகுதி இளைஞர்கள் முதலையைக் கயிற்றால் கட்டி மடக்கிப் பிடித்தனர். தண்ணீர் தேங்கி நின்ற வீடுகளுக்குள் விஷ ஜந்துக்கள் இருக்க வாய்ப்புள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!