ஃபிரிட்ஜில் மனைவி; சூட்கேஸில் குழந்தைகள் சடலம்!- சந்தேகத்தால் நடந்த பயங்கரம்

அலகாபாத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பூட்டிய வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

அலகாபாத்

உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தைச் சேர்ந்தவர்கள் மனோஜ் - ஸ்வேதா தம்பதி. இவர்களுக்கு ஃப்ரீத்தி (8), சிவானி (6), ஸ்ரேயா (3) என மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், நேற்று மாலை மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்துவிட்டு மனோஜும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். மனோஜ் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். மனைவி ஸ்வேதா குளிர்சாதனப்பெட்டியிலும், இரண்டு குழந்தைகள் சூட்கேஸிலும், ஒரு குழந்தை மற்றொரு அறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக காவல்துறையினர் கூறுகையில்,  ``முதற்கட்ட விசாரணையில் மனோஜ் தனது மனைவி மற்றும் குழந்தைகளை கொலைசெய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. குடும்பப் பிரச்னை அல்லது மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தினால் இந்தக்கொலை சம்பவம் நடந்திருக்கலாம். வீடு உள் பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. கதவுகளை உடைத்துக்கொண்டு பார்த்தபோது மனோஜ் மின்விசிறியில் சடலமாக இருந்தார். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது”. என்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!