கேரளா வெள்ள நிவாரணத்துக்கு 1.75 கோடி ரூபாய் வழங்கியது ஃபேஸ்புக்! | Facebook donated 1.75 crores for Kerala floods

வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (21/08/2018)

கடைசி தொடர்பு:12:30 (21/08/2018)

கேரளா வெள்ள நிவாரணத்துக்கு 1.75 கோடி ரூபாய் வழங்கியது ஃபேஸ்புக்!

ஃபேஸ்புக் கேரளா வெள்ளம்

பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக் நிறுவனம் கேரள வெள்ள நிவாரணத்துக்காக 2,50,000 டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் 1.75 கோடி ரூபாய்) நன்கொடையாக வழங்கியுள்ளது. பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் கேரள மாநிலத்துக்குக் களத்தில் இறங்கி சேவை செய்துவரும் GOONJ தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் வழியாக இந்தத் தொகை சீரமைப்பு மற்றும் நிவாரணத்துக்குச் செலவிடப்படவுள்ளது.

``கடந்த சில நாள்களில் ஃபேஸ்புக்கின் லைவ் வீடியோ, குரூப்ஸ் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பலரும் உதவி வருகின்றனர். இதில் நாங்கள் ஒரு சிறிய பங்காக 2,50,000 டாலர்களை GOONJ தொண்டு நிறுவனத்துக்கு வழங்கியுள்ளோம்" என ஃபேஸ்புக் நிறுவன ஊடகத்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமல்லாமல் ஏற்கெனவே ஃபேஸ்புக்கின்  Safety Check, Community help, Help and the Crisis Donate Button போன்ற வசதிகள் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டோர்களுக்கு உதவிகளும் நிதிகளும் பெறப்பட்டுள்ளன. மேலும், தேசியப் பேரிடர் மீட்புக் குழுவுக்கும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வருகிறது ஃபேஸ்புக்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க