காஞ்சிபுரத்தில் `மியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள்!' நிகழ்ச்சி

இன்றைய காலகட்டத்தில் மியூச்சுவல் ஃபண்ட் குறித்த ஆர்வம் மக்கள் மத்தியில் பெருகியுள்ளது. ஆனால், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் எண்ணிக்கை பெருகியுள்ளதால் எந்த ஃபண்டில் முதலீடு செய்வது, எவ்வளவு முதலீடு செய்வது, எப்படி முதலீடு செய்வது போன்ற முதலீட்டு மந்திரங்கள் இவர்களுக்குத் தெரியவில்லை. நல்ல மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது அவ்வளவு சுலபம் இல்லை. எந்த அளவுகோலில் தேர்ந்தெடுப்பது, எப்படிப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் ப்ரொஃபைல் உருவாக்குவது, எவ்வளவு காலத்துக்கு முதலீட்டைத் தொடர்வது என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை காணும் களமே, வரும் 26.8.2018 அன்று காஞ்சிபுரத்தில் நடைபெறவுள்ள `மியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள்!'  என்னும் முதலீட்டாளர் விழிப்பு உணர்வு நிகழ்ச்சியாகும்.  

மியூச்சுவல் ஃபண்ட்

நாணயம் விகடன் இதழ் மற்றும் ஆதித்யா பிர்லா கேப்பிடல் நிறுவனங்கள் இணைந்து இந்த விழிப்பு உணர்வு நிகழ்ச்சி, வரும் 26.8.2018-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. காஞ்சிபுரம் M.M அவென்யூ, மேட்டுத்தெருவில், பஸ் ஸ்டாப் அருகில் அமைந்துள்ள ஏ.கே.ஜி. திருமண மாளிகையில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு மந்திரங்கள் குறித்து முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன் மற்றும் ஆதித்யா பிர்லா சன்லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் மண்டலத் தலைவர் சுவாமிநாதன் கருணாநிதி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அனைவரையும் அழைக்கிறோம். அனுமதி இலவசம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!