இரவில் சிறுமியைப் பின்தொடர்ந்த இளைஞர்கள்... பதறவிட்ட வளர்ப்பு நாய்!

14 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்யவிருந்த கும்பலிடமிருந்து வளர்ப்பு நாய் காப்பாற்றியுள்ள சம்பவம், மத்தியப் பிரதேசத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நாய்
 

மத்தியப்பிரதேச மாநிலம் , சாகார் மாவட்டத்தில் உள்ள குரே தெஹ்சில் என்னும் கிராமத்தில்தான் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு, ரேகா என்கிற சிறுமியை (பெயர் மாற்றம்) அவரின் பாட்டி புகைமூட்டம் போடுவதற்காக வைக்கோல் கொண்டு வரச் சொல்லி அனுப்பியிருக்கிறார். வைக்கோல் வைக்கும் கொட்டகைக்குள் அந்தச் சிறுமி நுழைந்ததும், அதே ஊரைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் சிறுமியைப் பின்தொடர்ந்து உள்ளே சென்றனர். சிறுமியை அவர்கள் கீழே தள்ளி பாலியல் வன்கொடுமை செய்ய முற்பட்டதும், அந்தச் சிறுமி தன் வளர்ப்பு நாயை சத்தம்போட்டு அழைத்துள்ளார். உடனே அந்த இடத்துக்கு ஓடி வந்த நாய், அவர்கள் இருவரையும் துரத்தி துரத்திக் கடித்துள்ளது. அவர்கள் தப்பித்து ஓட முயன்றதும், அந்த நாய் தொடர்ந்து சத்தமாகக் குரைத்தது. நாயின் சத்தத்தைக் கேட்டு, அருகில் இருந்தவர்கள் வந்து சிறுமியை மீட்டனர். பின்னர், போலீஸுக்குத்  தகவல் கொடுக்கப்பட்டது. 

பாலியல் வன்கொடுமை
 

வளர்ப்பு நாய், சினிமா பாணியில் சிறுமியை ஆபத்திலிருந்து காப்பாற்றியது ஆச்சர்யம் அளிப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற இருவரும், போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!