வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (21/08/2018)

கடைசி தொடர்பு:18:20 (21/08/2018)

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: 2 மாதத்துக்குள் முடிந்த விசாரணை; 2 பேருக்கு தூக்கு

மத்தியப் பிரதேச மாநிலம் போபால் பகுதியைச் சேர்ந்த 2-ம் வகுப்பு மாணவி, ஜூன் மாதம் 26-ம் தேதி பள்ளி முடிந்து பெற்றோருக்காகக் காத்துக்கொண்டிருந்தார். அப்போது, அந்தச் சிறுமியை இருவர் கடத்திச் சென்று, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறையினர் இர்பான், ஆசிப் ஆகிய இருவரை கைது செய்தனர். சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று மாநிலம் முழுவதும் பெரும் போராட்டங்கள் நடைபெற்றன.

இதுதொடர்பான வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. விரைவாக விசாரணை நடத்திய சிறப்பு நீதிமன்றம், 'குற்றம்சாட்டப்பட்ட இருவரையும் குற்றவாளிகள் என்று உறுதி செய்தது. இருவருக்கும் மரண தண்டனை அளித்து தீர்ப்பளித்தது. பாலியல் குற்றம் நடைபெற்று இரண்டு மாதத்துக்கு முன்னதாகக் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிப்பது இதுவே முதன்முறையாகும்.