பெட்ரோல், டீசல் ஜி.எஸ்.டி வரம்புக்குள் வர வாய்ப்பில்லை! | No GST on petrol, diesel in near future as Centre, states not in favour

வெளியிடப்பட்ட நேரம்: 03:45 (22/08/2018)

கடைசி தொடர்பு:07:26 (22/08/2018)

பெட்ரோல், டீசல் ஜி.எஸ்.டி வரம்புக்குள் வர வாய்ப்பில்லை!

ஜி எஸ் டி

நாடு முழுவதும் பொருள்கள் மீதான வரி ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று கருதி ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது. ஆனால், பெட்ரோல் மற்றும் டீசல் ஜி.எஸ்.டி வரி வரம்புக்குள் கொண்டு வரப்படவில்லை. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப தினமும், இந்த விலைகள் மாற்றியமைக்கப்படுகின்றன. நாட்டில் பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்ந்து வருவதால், அதை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.

தற்போது, மத்திய அரசு ஒரு லிட்டர் பெட்ரோல் மீது ரூ.19.48 யும், டீசல் மீது ரூ.15.33 யும் கலால் வரியாக விதிக்கிறது. இதை தவிர்த்து மாநிலங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் மீது மதிப்பு கூட்டல் வரியை விதிக்கிறது. இப்படி பெட்ரோல் மற்றும் டீசல் மீது அதிகபட்சமாக 35-40 சதவிகிதம் வரையில் வரி விதிக்கப்படுகிறது. இந்த நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வர மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மமேந்திர பிரதான், சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி ஆகியோர்  மாநில அரசுகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், இந்த முடிவுக்கு மாநில அரசுகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன. மாநிலங்கள் வருவாய் இழப்பை சந்திக்க விரும்பவில்லை. எனவே, ஜி.எஸ்.டி வரம்புக்குள் டீசல் மற்றும் பெட்ரோல் விலை கொண்டு வர வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.