வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (22/08/2018)

கடைசி தொடர்பு:07:32 (22/08/2018)

ஜனவரி-மார்ச் காலாண்டில் 1.96 கோடி பான்கார்டுகள் - வருமானவரித்துறை தகவல்!

பான்கார்டுகள்

வருமானவரித்துறை நடப்பாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டில் புதிதாக 1.96 கோடி பான் கார்டுகள் வெளியிட்டுள்ளது. இந்த பான் கார்டுகளைத்தான் வருமான வரித் தாக்கல் செய்ய  பயன்படுத்துகின்றோம். இதன் மூலம் நாட்டில் பயன்பாட்டில் உள்ள மொத்த பான்கார்டுகளின் எண்ணிக்கை 37.9 கோடியாக வளர்ச்சி கண்டுள்ளது. மத்திய அரசு, வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரிக்க விரும்புகிறது. இதற்காக, பான் கார்டுகள் வாங்க ஊக்குவித்து வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் 35.94 கோடி பான் கார்டுகள் தான் பயன்பாட்டில்  இருந்தன. இது கடந்த மார்ச் மாதத்தில் 37.9 கோடியாக அதிகரித்துள்ளது. இதில் 97 சதவிகித பான்கார்டுகள் தனி நபர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது என்று வருமான வரித்துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.