வெளியிடப்பட்ட நேரம்: 01:30 (23/08/2018)

கடைசி தொடர்பு:19:46 (24/08/2018)

அமீரகம் அளித்த ரூ.700 கோடி நிதியுதவியைப் பெற இந்தியா மறுப்பதன் பின்னணி என்ன?

டந்த 2004-ம் ஆண்டு சுனாமி தாக்கியபோது அமெரிக்கா அளித்த நிதியுதவியை மத்திய அரசு பெற மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போதையை பிரதமர் மன்மோகன் சிங், 'இந்தியாவுக்கு தன்னை சீரமைத்துக்கொள்ள திறனும் சக்தியும் உண்டு' என்று அமெரிக்காவுக்கு பதில் அளித்ததோடு நிதியுதவியை பெறவும் மறுத்து விட்டார். 

கேரளா வெள்ளம் அமீரகம் அளித்த நிதியுதவியை பெற மறுப்பு

அப்போதிருந்தே பேரிடர் காலங்களில் வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதில்லை என்று மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. 2013-ம் ஆண்டு உத்தரகாண்ட் பெரு வெள்ளத்தின்போதும் மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து வந்த நிதியுதவியைப் பெற அனுமதிக்கவில்லை. கேரள பெருமழையால் பாதிக்கப்பட்ட  மாநிலத்தை சீரமைக்க ரூ.2,600 கோடி தேவைப்படும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார். கேரள மாநிலத்துக்கு அமீரகம் ரூ.700 கோடி, கத்தார் ரூ.35 கோடி நிதியுதவி அறிவித்தன.

மாலத்தீவு, ஜப்பான், தாய்லாந்து ஆகிய நாடுகளும் நிதியுதவி அளிக்க முன்வந்தன. தனிநபர்கள் கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளிப்பது போல வெளிநாடுகள் அளிக்கும் நிதியுதவியை மாநில அரசுகள் தன்னிச்சையாக பெற்றுவிட முடியாது. வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் முறையான அனுமதிக்குப் பிறகே நிதியுதவியைப் பெற முடியும். முன்னாள் ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி, ``பழைய அரசின் முடிவைப் பின்பற்ற வேண்டுமென்ற அவசியம் இல்லை. மோடி அரசு விதியை மாற்ற வேண்டும் '' என்று கேட்டுக் கொண்டுள்ளார். 

கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் 13 மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன. 8 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 26,000 வீடுகள் சேதமானதோடு பல ஆயிரம் கிலோ மீட்டர் தெலைவுக்கு சாலைகள் சேதமடைந்து கிடக்கின்றன. சேத மதிப்பு ரூ.21 ஆயிரம் கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. 

அதே வேளையில் தற்போதையை அரசு, 2016-ம் ஆண்டு வெளியிட்ட தேசிய பேரிடர் மேலாண்மை திட்டக்கொள்கையில், ``இந்தியா தானாக எந்த ஒரு நாட்டிடம் நிதி கேட்காது. ஆனால் தானாக எந்த நாடு நிதி அளித்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் " என்றும் கூறப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க