கேரளாவில் பயங்கர மழைக்குக் காரணம் என்ன? - விளக்கும் நாசா | NASA released video of heavy rain in India

வெளியிடப்பட்ட நேரம்: 12:32 (23/08/2018)

கடைசி தொடர்பு:15:16 (23/08/2018)

கேரளாவில் பயங்கர மழைக்குக் காரணம் என்ன? - விளக்கும் நாசா

இந்த வருடம் இந்தியாவில் பருவமழை குறித்த வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது. இதில் கேரளாவில் பெய்த மழை அளவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கேரளா

அமெரிக்காவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா தனது செயற்கைக்கோள் மூலம் இந்த வருடம் இந்தியாவில் பொழிந்த தென்மேற்குப் பருவமழை குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளது.

வீடியோ மட்டுமின்றி கடந்த இரண்டு வாரங்களாக கேரளாவை புரட்டிபோட்ட கனமழைக்கு இரண்டு முக்கிய காரணங்களையும் விளக்கியுள்ளது. நாசாவில் விளக்கம் பின்வருமாறு... 

கேரளா உள்ளிட்ட இந்திய பகுதிகளில், ஆகஸ்டு மாதத்தில் கோடைக்கால பருவமழை பொழிவது ஒரு வழக்கமான நிகழ்வு. ஆனால் சில சமயங்களில்  பருவ மழையின் போது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் உருவாகி மழையின் தீவிரத்தை அதிகரிக்கும். கேரளாவில் பெய்த கனமழைக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.

கேரளாவுக்கு கனமழையை கொண்டு வந்து சேர்த்ததில், மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு முக்கிய பங்குண்டு. மேற்கு தொடர்ச்சி மலைகளின் நிலப்பரப்பு இமயமலையைக் காட்டிலும் சிறியது என்றாலும் இந்த மலைத்தொடர் இந்தியாவின் மேற்கு கடற்கரைக்கு நேர்க்கோட்டில் அமைந்துள்ளது. மேலும் இந்த மலைத்தொடரின் பல சிகரங்கள் 2,000 மீட்டர் (~ 6,500 அடி) அளவுக்கு அமைந்துள்ளன. அதன் விளைவாக மேற்குத் தொடர்ச்சி மலை, அரபிக்கடலில் இருந்து வரும் குளிர்ந்த காற்றைத் தடுத்து அதன் மேற்பகுதியில் அமைந்துள்ள கேரளா மற்றும் மேற்கு கடற்ரையில் நல்ல மழையைத் தருகின்றது.  இம்முறையும் அப்படிதான். ஈரபதத்தை தடுத்து, கேரளா நிலப்பரப்பின் மீது உருவான அடர்த்தியான மேகங்களை அதிக மழையை பொழியும்படி செய்துவிட்டது. அதாவது கேரளாவில் பெய்த கனமழைக்கு முக்கிய காரணம் `Concentrated Cloud band' தான் “ இவ்வாறு நாசா விளக்கியுள்ளது. 

நாசா வெளியிட்டுள்ள வீடியோவில், 

ஆகஸ்ட் 13 முதல் 20-ம் தேதி வரை இந்தியாவில் இரண்டு அடர்த்தியான மேக அடுக்குகள் காணப்படுகின்றன. முதல் அடுக்கு வடக்கு தீபகற்பம் வரை பரந்து விரிந்துள்ளது. இது சாதாரணமான தென்மேற்கு பருவமழை நிகழ்வை கொண்டு வந்தது. முதல் அடுக்கின் படி வடமேற்கு பகுதியில் 12செ.மீ மழையும் வங்காள விரிகுடா பகுதியில் 35 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. இரண்டாவது அடுக்குதான் கேரளாவுக்கு கனமழை கொண்டு வந்தவை.

 

 

 


[X] Close

[X] Close