சிபிஎஸ்இ தேர்வு முறைகளில் மாற்றம்?! - மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை தகவல்

த்திய பாடத்திட்டத்தில் (சி.பி.எஸ்.இ) 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவருவது தொடர்பான ஆலோசனை நடந்துவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

நீட்

சிபிஎஸ்இ அதிகாரி ஒருவர் கூறியதாவது: " தொழிற்கல்வியைக் (Vocational subjects) குறைவான மாணவர்களே தேர்வுசெய்கின்றனர். அதனால், பிப்ரவரி கடைசி வாரத்தில் தொழிற்கல்விப் பாடங்களுக்கான தேர்வை நடத்துவதன்மூலம் முதன்மைப் பாடங்களுக்கான (Main subjects) தேர்வை மார்ச் மாதம் 15-ம் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். இதன்மூலம் விடைத்தாள்களை மதிப்பிட அதிக நேரம் கிடைக்கும். தேர்வு முடிவுகளையும் விரைவாக வெளியிடலாம். மேலும், வினாத்தாளில் பகுத்தாய்வுசெய்யும் திறன்கொண்ட கேள்விகளை அதிகரிப்பதன்மூலம், பொருள் அறியாமல் படிப்பதைக் குறைக்கலாம் எனவும் கல்வியாளர்கள் சொல்கின்றனர். எனவே, சிறு குறு வினாக்களை(1-5 மதிப்பெண்) மட்டுமே கேட்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதன்மூலம், பாடங்களை மனப்பாடம் செய்து அப்படியே எழுதாமல், மாணவர்களின் புரிதல் திறன் அதிகரிக்கும் நிலை ஏற்படும்.

சிபிஎஸ்இ-யின் துணை விதிகளில், இனி சிபிஎஸ்இ பள்ளிக்கான அங்கீகாரம் அல்லது புதுப்பித்தல் சான்றிதழ் பெற கடும் விதிகள் பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாநிலங்களில் உள்ள கல்வித்துறை அலுவலங்கள், பள்ளிகளின் கட்டடங்களின் உறுதியைச் சோதித்து சான்றிதழ் வழங்குகிறது. அதனால், மீண்டும் அதையே சோதிப்பது தேவையற்றது. எனவே, சிபிஎஸ்இ நடத்தும் ஆய்வில், பள்ளிகளின் கல்வித் தரம், ஆசிரியர்களின் தகுதி, தேர்ச்சி விகிதம் போன்றவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இத்திட்டம் இப்போது விவாதத்தில் உள்ளது. அடுத்த கல்வி ஆண்டுக்குள் முடிவெடுத்து, செயல்பாட்டுக்கு வரவும் திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!