வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (24/08/2018)

கடைசி தொடர்பு:17:15 (24/08/2018)

மழையில் சேதமான பைக்குகள்; தமிழக அரசு செய்ததை கேரள அரசு செய்யுமா?

கேரள மாநிலத்தில் ஏற்பட்ட கனமழை காரணமாக, வீடுகளில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள், கார்கள் நாசம் அடைந்தன. அவற்றைச் சரிசெய்வதற்காக ஒர்க்‌ஷாப்களில் மக்கள் குவிந்துள்ளனர்.

இருசக்கர வாகனங்கள்

கேரள மாநிலத்தில், மழை வெள்ளம் காரணமாக கிராமங்களும்  நகரங்களும் தண்ணீரில் மூழ்கின. வீடுகளில் இருந்த அனைத்துப் பொருள்களும் தண்ணீரில் மூழ்கி நாசமாயின. அதிலும் குறிப்பாக, வீடுகளுக்கு முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள், கார், ஆட்டோ என லட்சக்கணக்கான மோட்டார் வாகனங்கள் தண்ணீரில் மூழ்கி நாசமடைந்தன. இப்போது, தண்ணீர் வடிந்துள்ள நிலையில், சேதமடைந்த வாகனங்களை மீட்டு பழுதுபார்க்கும் பணியில் கேரள மாநில மக்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால், வாகனப் பழுது பார்க்கும் ஒர்க்‌ஷாப்கள், சர்வீஸ் சென்டர்கள் அனைத்தும் பிஸியாகக் காட்சியளிக்கின்றன. ஒவ்வொரு ஒர்க் ஷாப்பிலும் 50, 100 என டூவீலர்கள் வரிசையாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது.

இருசக்கர வாகனங்கள்

பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக, வாகனங்களைச் சரிசெய்வது காலதாமதம் ஆகிறது. 2015-ம் ஆண்டு சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோதும் அதிகமான இருசக்கர வாகனங்கள் பழுதடைந்தன. இதையடுத்து, அரசு சார்பில் இலவச இருசக்கர வாகனம் பழுது நீக்கும் முகாம்கள் செயல்படுத்தப்பட்டன. அதுபோல, கேரள மாநிலத்திலும் அரசு சார்பில் இலவச இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் முகாம்கள் அமைக்க வேண்டும் என்று கேரள மக்கள் விரும்புகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க