வெளியிடப்பட்ட நேரம்: 08:30 (25/08/2018)

கடைசி தொடர்பு:11:26 (25/08/2018)

‘தண்ணீர் தொட்டியில் சடலமாகக் கிடந்த சிறுமி!’- வாலிபர் கைது

மகாராஷ்டிராவில் 14 வயது சிறுமியை வாலிபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் வன்கொடுமை

மகாராஷ்டிரா  மாநிலம் தானேவில் 14 வயது சிறுமி தன் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த வாலிபர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 23 வயது வாலிபர் ராகுல் என்பவரைக் கைது செய்தனர்.

இச்சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் கூறுகையில், `` சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த அந்த வாலிபர் சிறுமியை  பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், சிறுமியை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்துக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார். வெளியில் சென்றவர்கள் வீடு திரும்பியபோது சிறுமி அசைவில்லாமல் இருந்துள்ளார். இதைக்கண்ட சிறுமியின் மூத்த சகோதரி பதற்றத்துடன் தனது பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து உடனடியாக அவர்கள் காவல்துறையினரை தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த காவலர்கள் சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் ராகுல் மீது சந்தேகம் எழுந்ததால் அவரைக் கைது செய்தோம். அவரிடம் நடத்திய விசாரணையில் சிறுமியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். ராகுல் மீது இந்திய தண்டனைச் சட்டம் 376 (பாலியல் வன்கொடுமை) , 302 (கொலை) மற்றும் 452 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தனர்.