வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (25/08/2018)

கடைசி தொடர்பு:10:55 (25/08/2018)

மனைவியை அறையில் பூட்டி இரும்புக் கம்பியால் தாக்குதல் - கொடூர கணவன் கைது

ஜம்மு- காஷ்மீரில் மனைவியை இரும்புக் கம்பியால் கொடூரமாகத் தாக்கிய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மனைவி

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ரஜோரி பகுதியைச் சேர்ந்தவர்கள் குல்தீப் ராஜ் - சுனிதா தேவி தம்பதி. குடும்ப விவகாரம் தொடர்பாக கணவன், மனைவி இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த குல்தீப் ராஜ் தனது மனைவியை வீட்டில் உள்ள சிறிய அறையில் பூட்டி வைத்து கொடுமைப்படுத்தியுள்ளார். மேலும், இரும்புக் கம்பிகளைக் கொண்டு அந்தப்பெண்ணை கடுமையாகத் தாக்கியுள்ளார். இதில் அவருக்கு கை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அப்பகுதியில் உள்ள மருத்துவனையில் அனுமதித்தனர். தற்போது அந்தப்பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அந்தப்பெண் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அவரின் கணவர் குல்தீப் ராஜை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக, அந்தப்பெண் சிகிச்சை பெற்று வரும் மருத்துவரிடம் மருத்துவ அறிக்கை கோரியுள்ளதாகவும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.