வெளியிடப்பட்ட நேரம்: 12:10 (25/08/2018)

கடைசி தொடர்பு:12:10 (25/08/2018)

`முப்படைகளில் அதிகம் சேருங்கள்'! - பெண்களை அழைக்கும் நிர்மலா சீதாராமன்

``முப்படைகளிலும் பெண்களுக்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. பாதுகாப்பு பணிகளில் பெண்கள் அதிகம் சேர வேண்டும்'' என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

நிர்மலா சீதாராமன்

சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், டாக்டர். வி.சந்தா, நடிகை லட்சுமி, பாடகி வாணி ஜெயராம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். 

இதில் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ``இந்தப் பள்ளி 150-வது ஆண்டு விழா கொண்டாடுவது மிகச்சிறப்பு. இங்கு படித்த பலர் தற்போது பல துறைகளில் சிறந்து விளங்குகின்றனர். இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவிகளான டாக்டர் வி.சந்தா, நடிகை லட்சுமி, பாடகி வாணி ஜெயராம் ஆகியோர் பள்ளியின் சிறப்பு மற்றும் அவர்களுக்குப் பாடமெடுத்த ஆசிரியர்களின் பெயர்களை இன்னும் மறக்காமல் கூறினர். மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. இது அவர்கள் ஆசிரியர் மீது வைத்திருந்த ஈடுபாட்டைக் காட்டுகிறது. 

இந்திய ராணுவத்தில் அதிகளவில் பெண்கள் சேர வேண்டும். முப்படைகளிலும் பெண்களுக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. முன்பு தமிழகத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரிகள் மற்ற மாநிலங்களில் அதிகம் பணிபுரிந்தனர். ஆனால், தற்போது அது குறைந்துள்ளது. முன்பு போலவே மீண்டும் பாதுகாப்புத் துறைகளில் தமிழர்கள் அதிகம் பேர் சேர்ந்து பணியாற்ற வேண்டும்” எனப் பேசினார்.