12 விமானங்களில் கேரளாவுக்கு வரும் 175 டன் நிவாரணப் பொருள்கள்! ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தாராளம் | Emirates SkyCargo will carry flood relief cargo of over 175 tons to Thiruvananthapuram

வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (25/08/2018)

கடைசி தொடர்பு:12:30 (25/08/2018)

12 விமானங்களில் கேரளாவுக்கு வரும் 175 டன் நிவாரணப் பொருள்கள்! ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தாராளம்

வெள்ளம் பாதித்த கேரளாவுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் சுமார் 175 டன் அளவுக்கு நிவாரணப் பொருள்களை அனுப்பியுள்ளன. 

 ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அனுப்பும் நிவாரணப் பொருள்கள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தற்போது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வரும் கேரளாவுக்காக இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் சில வெளிநாடுகளில் இருந்தும் தொடர்ந்து நிவாரணப் பொருள்கள் வந்துகொண்டிருக்கின்றன. இருந்தும் இன்னும் பல ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.  இந்த நிலையில், ஐக்கிய அரசு எமிரேட்ஸைச் சேர்ந்த சில தொழில் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் சுமார் 175 டன் எடையுள்ள நிவாரணப் பொருள்களை இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளது. 

எமிரேட்ஸ் ஸ்கை கார்கோவின் 12-க்கும் மேற்பட்ட விமானங்களில் இந்தப் பொருள்கள் திருவனந்தபுரம் வரவுள்ளது. இதில் உயிர்காக்கும் படகுகள், போர்வைகள், உலர்ந்த உணவுப்பொருள்கள் ஆகியவை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்த நிவாரணப் பொருள்கள் கேரளாவில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளது. இதை எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.