‘மொத்த இந்தியாவும் உங்களுக்குத் தோள் கொடுக்கும்’ - கேரள மக்களுக்குப் பிரதமர் ஓணம் வாழ்த்து

‘இந்த ஓணம் உங்களுக்கு மேலும் வலிமை தரும், மொத்த இந்தியாவும் உங்களுக்குத் தோள் கொடுக்கும்’ எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

மோடி

கேரள மாநிலத்தில் அனைத்து மக்களும் இணைந்து கொண்டாடும் ஒரே பண்டிகை ஓணம். தமிழர்களுக்கு சித்திரை முதல் மாதம் போல் மலையாளிகளுக்குச் சிங்கம் என்பதுமுதல் மாதம். இந்தத் தினத்தை சிறப்பிக்கும் வகையில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. வருடாவருடம் கேரளாவில் களைக்கட்டும் இந்தப் பண்டிகை இந்த வருடத்தின் மழை, வெள்ளத்தால் முற்றிலும் களையிழந்து காணப்படுகிறது. கேரள வெள்ளத்தால் இந்த வருடம் அங்கு ஓணம் பண்டிகை ரத்து செய்யப்பட்டுள்ளது. பண்டிகைக்கான செலவுகளை நிவாரணப் பணிகளுக்கு ஒதுக்கப்படும் என முதல்வர் பினராயி விஜயன் அறிவித்திருந்தார். 

இந்த நிலையில், ஓணம் திருநாளான இன்று பிரதமர் மோடி தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ``கேரள மக்கள் கடந்த சில நாள்களாக அனுபவித்து வந்த கஷ்டங்களிலிருந்து வெளியேவர இந்த ஓணம் பண்டிகை உங்களுக்கு அதிக வலிமை தரும். மொத்த இந்தியாவும் உங்களுக்குத் தோள் கொடுக்கும், பிரார்த்தனை செய்யும்” என அவர் குறிப்பிட்டுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!