அரசுப் பேருந்துகளில் 2 நாள் இலவசப் பயணம்! - பெண்களுக்கு உ.பி அரசின் ரக்‌ஷா பந்தன் ஸ்பெஷல்

ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2 நாள்கள் பெண்கள் இலவசமாகப் பேருந்துகளில் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ரக்‌ஷா பந்தன்

சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக நாடுமுழுவதும் ரக்‌ஷா பந்தன் பண்டிகை நாளை வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. தென் மாநில மக்களைவிட வட மாநிலத்தில் உள்ளவர்களே இந்தப் பண்டிகைக்கு அதிக முக்கியத்துவம் அளித்துக்கொண்டாடுவர். இந்துக்களால் கொண்டாடப்படும் இந்தப் பண்டிகை மதங்களையும் தாண்டி நேசத்தைக் கொண்டிருப்பதால் பொதுவாக அனைவராலும் கொண்டாடப்படுகிறது. பெண்கள் தங்களின் சகோதரர் அல்லது சகோதரராக கருதும் ஆண்களின் கையில் ராக்கி கயிறுகளைக் கட்டி இந்தப் பண்டிகையைக் கொண்டாடுவர். ஆண்களும் தங்களின் தங்கைகளுக்குப் பரிசளித்து மகிழ்வர். 

இந்த நிலையில், ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கலாம் என உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ``ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு உத்தரப்பிரதேச பெண்கள் அனைவரும் ஆகஸ்ட் 25 மற்றும் 26 ஆகிய இரண்டு நாள்கள் ஏ.சி அல்லாத பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம்'' எனக் கூறப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!