வர்த்தக யுத்தம்... இந்தியாவில் உருக்கு இறக்குமதி 15 சதவிகிதம் அதிகரிப்பு!

அமெரிக்காவின் வரி விதிப்பு காரணமாக, இந்தியாவில் உருக்கு இறக்குமதி அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. ஏப்ரல் - ஜூன் மாதம் வரையிலான முதல் காலாண்டில் உருக்கு இறக்குமதி 15 சதவிகிதம் அதிகரித்து 21 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.

வர்த்தக யுத்தம்... இந்தியாவில் உருக்கு இறக்குமதி 15 சதவிகிதம் அதிகரிப்பு!

மெரிக்கா, சீனா ஆகிய இரண்டு நாடுகளிடையே வர்த்தக யுத்தம் நடைபெற்றுவருகிறது. அமெரிக்கா, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல பொருள்களுக்குக் குறிப்பாக உருக்குப் பொருள்களுக்குக் இறக்குமதி தீர்வையை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதற்குப் பதிலடியாக, அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீது அதிக வரியை விதித்துள்ளது சீனா. இதனால் சீனா பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்குப் போட்டியாக சீனாவும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல பொருள்கள் மீது இறக்குமதி வரியைப் பன்மடங்கு உயர்த்தியுள்ளது. இப்படி இரண்டு நாடுகளும் போட்டி போட்டுக்கொண்டு வர்த்தக யுத்தத்தில் ஈடுபடுவதால் சர்வதேசப் பொருளாதாரம் பாதிப்புக்குள்ளானது. இந்த வர்த்தக யுத்தம் இந்தியாவையும் பாதித்துள்ளது. இதனால், ஆசிய - இந்தியப் பங்குச்சந்தைகளும், பங்குச்சந்தை முதலீட்டாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த அதிரடியாக அமெரிக்கா கடந்த மார்ச் மாதம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உருக்குப் பொருள்கள் மீது 25 சதவிகிதம் வரியும், அலுமினியப் பொருள்கள் மீது 10 சதவிகிதம் வரியும் விதித்தது. இதைத்தொடர்ந்து, அமெரிக்காவுக்கு அதிகளவில் உருக்கு ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ள தென் கொரியாவும், 10-வது இடத்தில் உள்ள ஜப்பானும் அதிகளவில் பாதிக்கப்பட்டன. இதையடுத்து, இந்த இரு நாடுகளும், உருக்கு தேவைப்பாடு அதிகமுள்ள இந்தியாவுக்கு அதிகளவில் உருக்கு ஏற்றுமதி  செய்யத் தொடங்கியுள்ளன. 

உருக்கு

அமெரிக்காவின் வரி விதிப்பு காரணமாக, இந்தியாவில் உருக்கு இறக்குமதி அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. ஏப்ரல் - ஜூன் மாதம் வரையிலான முதல் காலாண்டில் உருக்கு இறக்குமதி 15 சதவிகிதம் அதிகரித்து 21 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, தென் கொரியாவிலிருந்து  இறக்குமதி 31 சதவிகிதமும், ஜப்பானிலிருந்து ஏற்றுமதி 30 சதவிகிதமும் உயர்ந்துள்ளது. மேலும், முதல் காலாண்டில் அதிகளவில் உருக்கு இறக்குமதி செய்த நாடாகவும் உருவெடுத்துள்ளது. 

இந்த இறக்குமதியால், உள்நாட்டு உருக்கு தொழிற்சாலைகள் பாதிக்கப்படாமல் இருக்க, இறக்குமதியைக் கட்டுப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, இறக்குமதியாகும் உருக்கு பொருள்கள் மீது கூடுதல் வரி விதிக்கவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம், ரயில்வே துறை மற்றும் கட்டுமானத் துறைக்குத் தேவையான உருக்கிற்கான தேவையை பூர்த்தி செய்யமுடியாமல்,  தொழிற்சாலைகள் திணறி வருகின்றன. இருந்தாலும்,  அதன் இறக்குமதியைக் கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

ரயில்வே துறைக்குப் பயன்படும் உருக்கு இறக்குமதி ஏப்ரல்-ஜூன் மாத காலத்தில் 18,000 டன்னாக அதிகரித்துள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் 500 டன்னாகத்தான் இருந்தது. இதேபோன்று, கட்டுமானத்துக்குப் பயன்படும் உருக்கின் இறக்குமதியும் இரண்டு மடங்கு உயர்ந்து 22,000 டன்னாக உயர்ந்துள்ளது. 

அமெரிக்காவின் வரி விதிப்பால் இந்திய உருக்குத் துறையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீதான இறக்குமதி வரியை இந்தியா உயர்த்தியுள்ளது. இது வரும் மாதம் முதல் அமலுக்கு வரும் என்று தெரிகிறது. இப்படி, நாடுகள் விட்டுக்கொடுக்காமல், போட்டி போட்டுக்கொண்டு வரி விதித்தால் அது பொருளாதார வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்குமா என்பது போக போகத்தான் தெரியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!