தொடர்ந்து உயர்ந்துவரும் கங்கை நதியின் அளவு - உத்தரகாண்டில் பலத்த மழை எச்சரிக்கை!

உத்தரகாண்ட் மற்றும் இமாசல பிரதேசம் போன்ற மாநிலங்களில் அதிக மழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

உத்தரகாண்ட்

உத்தரகாண்ட் மற்றும் இமாசல பிரதேசம் போன்ற மாநிலங்களில் அடுத்த இரண்டு நாள்களுக்கு பலத்த மழை பொழியும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் இமாசல பிரதேசத்தில் உள்ள கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வடக்கு சமவெளிப் பகுதிகள் மற்றும் கங்கை நதிக்கு அருகில் உள்ள இடங்களில் கன மழை அல்லது மிக கனமழை பொழியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டேராடூன், ஹரித்துவார், பூரி, நைனிடால், சாம்பவாத் போன்ற மாவட்டங்களில் பரவலாக மழை பொழியும் என கூறப்பட்டுள்ளது. 

வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பை அடுத்து கங்கை நதிக்கு அருகில் உள்ள மக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கும்படி அதிகாரிகளுக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. பல இடங்களில் சாலைகள், பாலங்கள் போன்றவை சேதமடைந்துள்ளன. கன மழையின் காரணமாக உத்தரகாண்டில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு முழுவதும் பெய்த கன மழையால் ரிஷிகேஷ் பகுதியில் உள்ள கங்கை நதியின் அளவு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!