ரூ.21 ஆயிரம் கோடியில் புதிதாக 111 ஹெலிகாப்டர்கள் - கடற்படையை மேம்படுத்தும் மத்திய அரசு!

கடற்படை பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாகப் புதிதாக 111 ஹெலிகாப்டர்களை வாங்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. 

ஹெலிகாப்டர்

இந்தியாவின் முப்படைகளையும் மேம்படுத்தும் விதமாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன்ஒரு பகுதியாக உள்நாட்டில் தளவாட உற்பத்திகளுக்கு அனுமதி அளித்து வருகிறது மத்திய அரசு. இதுஒருபுறம் இருக்க ரஷ்யா, அமெரிக்க உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்தும் போர் விமானங்கள், ராணுவ தளவாடங்கள் ஆகிய பாதுகாப்பு வாகனங்களை விலைக்கு வாங்கி வருகிறது மத்திய அரசு. இதில் ஊழல் நடந்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினாலும், தொடர்ந்து வெளிநாடுகளிலிருந்து பாதுகாப்பு வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. 

இதற்கிடையே, இன்று கடற்படை பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக ரூ.21,000 கோடியில் 111 ஹெலிகாப்டர்களை வாங்க பாதுகாப்புத்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் ராணுவத்துக்கு ரூ.46,000 கோடியில் ராணுவ தளவாடங்களை வாங்க தளவாடங்கள் கொள்முதல் குழு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் நடைபெற்ற பாதுகாப்பு துறை ஆலோசனை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஓபிஎஸ் தம்பிக்கு பாதுகாப்புத்துறை ஹெலிகாப்டர் வழங்கியது, ஓகி புயலின் போது மீனவர்களை மீட்கவும், கேரள வெள்ளப் பதிப்பின் போதும் குறைவான அளவிலான ஹெலிகாப்டர் சேவைகளை மத்திய அரசு வழங்கியதாகச் சர்ச்சை எழுந்த நிலையில் தற்போது புதிதாக ஹெலிகாப்டர்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!