வாஜ்பாயின் அஸ்தியைக் கரைக்க சென்றவர்களுக்கு நிகழ்ந்த சோகம்!

வாஜ்பாயின் அஸ்தியைக்  கரைக்க சென்றவர்கள் படகு திடீரென கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது

வாஜ்பாய்

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தியின் ஒருபாகம் முன்னதாக கங்கை நதியில் கரைக்கப்பட்டது. பிறகு அஸ்தியின் மீதியை அனைத்து மாநிலங்களிலும் உள்ள முக்கிய நதிகளில் கரைக்க பா.ஜ.க முடிவு செய்து கடந்த 22-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அனைத்து மாநில பா.ஜ.க தலைவர்களிடமும் அஸ்தி வழங்கப்பட்டது. 

இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் பாஸ்தி மாவட்டத்தில் உள்ள குவானோ நதியில் வாஜ்பாயின் அஸ்தியைக் கரைக்க அம்மாவட்ட  பா.ஜ.க எம்.பி, எம்.எல்.ஏ, மாவட்ட நீதிபதி மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகிய பலர் சென்றுள்ளனர். அவர்கள் படகில் சென்றுகொண்டிருக்கும் போது பலத்த காற்று வீசியதால் எதிர்பாராத விதமாகப் படகு கவிழ்ந்துள்ளது. இதில் எம்.பி, எம்.எல்.ஏ போன்ற அனைவரும் நீரில் தத்தளித்துள்ளனர். பிறகு உடனிருந்த மற்ற பா.ஜ.க-வினர் அவர்களை காப்பாற்றியுள்ளார். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய காவல்துறை கண்காணிப்பாளர் திலீப் குமார், ‘படகு ஒரு பக்கமாக மேலே தூக்கிய போது நிற்க முடியாமல் அனைவரும் ஆற்றில் விழுந்து விட்டனர். பிறகு உடனடியாக அவர்கள் அனைவரும் காப்பாற்றபட்டுவிட்டனர். எந்த விபத்தும் ஏற்படவில்லை’ எனக் கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!