`அரசுப் பள்ளி மாணவர்களும் ஐஐடி-களில் தடம்பதிக்க வேண்டும்' - மாணவர்களின் புதுமுயற்சி இது! | Delhi Indian Institute of Technology students will provide free coaching to engineering aspirants

வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (26/08/2018)

கடைசி தொடர்பு:12:30 (26/08/2018)

`அரசுப் பள்ளி மாணவர்களும் ஐஐடி-களில் தடம்பதிக்க வேண்டும்' - மாணவர்களின் புதுமுயற்சி இது!

அகில இந்திய அளவில் நடைபெறும் கடினமானப் போட்டித் தேர்வுகளில் ஜே.இ.இ (Joint Entrance Exam) தேர்வும் ஒன்று. இத்தேர்வில் தேர்ச்சி பெறும் பட்சத்தில் ஐ.ஐ.டி, என்.ஐ.டி உள்ளிட்ட கல்லூரிகளில் மாணவர்கள் சேர முடியும். வட இந்திய மாணவர்களே ஜே.இ.இ தேர்ச்சி விகிதத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். 

ஐஐடி

இந்நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களும் ஜே.இ.இ தேர்வில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில் டெல்லி ஐ.ஐ.டி மாணவர்கள் முயற்சியில் இறங்கி கடந்த 2014-ல் `ஆரோஹன்' என்ற அமைப்பைத் தொடங்கினர். 

இதுகுறித்து ஆரோஹன் அமைப்பைச் சேர்ந்த ஸ்ரீயாஷ் ராஜ் கூறுகையில், `கடந்த 2014-ம் ஆண்டு ஆரோஹன் அமைப்பானது தொடங்கப்பட்டது. அப்போது, 10-ல் இருந்து 12 மாணவர்கள் அமைப்பில் சேர்ந்து படிக்கப் பதிவு செய்தார்கள். படிப்படியாக முன்னேறினோம். சமூக ஊடகங்கள் வாயிலாக எங்கள் அமைப்பை விரிவு படுத்தினோம். இருப்பினும், ஜே.இ.இ தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் அதிகம் பேர் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கம் எங்களிடம் தோன்றியது. அதன்படி, அரசுப் பள்ளிகளுக்குச் சென்று 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களிடம் விவரித்தோம். தாங்கள் நடத்தும் பயிற்சி வகுப்புக்கு எவ்வித கட்டணமும் வழங்க வேண்டாம், நாங்கள் இலவசமாகப் பயிற்சி வகுப்பு நடத்துகிறோம் என மாணவர்களிடம் கூறினோம். தற்போது, பதிவான மாணவர்களின் எண்ணிக்கை 10-ல் இருந்து 127 ஆக உயர்ந்துள்ளது. எங்கள் பயிற்சி வகுப்பில் இருந்து நிச்சயம் அனைத்து மாணவர்களும் ஜே. இ.இ தேர்வில் தேர்ச்சி பெறுவார்கள்' என்றார் மகிழ்ச்சியுடன்.


[X] Close

[X] Close