தமிழகத்திலிருந்து கேரளாவுக்குச் சென்ற 1 லட்சம் `அம்மா' வாட்டர் பாட்டில்கள்!  | tamilnadu government sent 1 lakh amma water bottles to kerela

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (26/08/2018)

கடைசி தொடர்பு:16:40 (26/08/2018)

தமிழகத்திலிருந்து கேரளாவுக்குச் சென்ற 1 லட்சம் `அம்மா' வாட்டர் பாட்டில்கள்! 

கனமழையால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்காக நிவாரண பொருள்களானது நாடுமுழுவதிலும் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. அதே வேளையில், அமீரகம், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிடம் இருந்தும் நிவாரண பொருள்கள் கேரளாவுக்கு வந்த வண்ணம் உள்ளன.

இடுக்கி, எர்ணாகுளம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் சூழ்ந்த வெள்ளம் வடிந்து வருகிறது. இதனால், முகாம்களில் இருந்த மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இருந்த போதும், வெள்ளத்தால் வீடுகளில் பாம்பு போன்ற விஷ உயிரினங்கள் புகுந்ததால் மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதனால், மாநிலம் முழுவதும் சுகாதார பணிகளின் அரசு தீவிரம் காட்டி வருகின்றது. இதனிடையில், மக்களுக்கான போர்வை, உடைகள், பால், பிஸ்கட்டுகள் என அத்தியாவசிய தேவைப் பொருள்களை தமிழ அரசு மற்றும் தமிழக அரசியல் கட்சிகள் அனுப்பி வைத்து வருகின்றன.

அதன் வகையில், தமிழகத்திலிருந்து 1 லட்சம் அம்மா வாட்டர் பாட்டில்கள் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 11 லாரிகளில் வாட்டர் பாட்டில்கள் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்திலிருந்து அரிசி, தானியங்கள், மருத்துவப் பொருள்கள் என ரூ.4 கோடி மதிப்பிலான நிவாரண பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 


[X] Close

[X] Close