பா.ஜ,க நிர்வாகியை பொது இடத்தில்வைத்து கன்னத்தில் அறைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ - வைரலாகும் வீடியோ | Congress MLA slaps BJP Office-Bearer in Madya pradesh

வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (26/08/2018)

கடைசி தொடர்பு:20:30 (26/08/2018)

பா.ஜ,க நிர்வாகியை பொது இடத்தில்வைத்து கன்னத்தில் அறைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ - வைரலாகும் வீடியோ

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க தலைவர் ஒருவரை காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் பொது இடத்தில் வைத்து கன்னத்தில் அறைந்துள்ளார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டம் தண்டா பகுதியில் ஆகஸ்ட் 24-ம் தேதி குழந்தை ஒன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. அந்தக் குழந்தைக்கு இழப்பீடு வழங்குவதற்காக, நேற்று பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சென்றுள்ளனர். அப்போது இரு கட்சி நிர்வாகிகளுக்குமிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, உள்ளூர் பா.ஜ.க தலைவர் பிரதீப் காடியா என்பவரை, காங்கிரஸ் எம்.எல்.ஏ உமாங் சிங்கார் கன்னத்தில் அறைந்தார்.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பா.ஜ.க தலைவரை காங்கிரஸ் எம்.எல்.ஏ தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. காவல்துறையினர், இரு தரப்பினரையும் பிரித்துவைத்தனர். இதுகுறித்து பிரதீர் காடியா அளித்த புகாரின் அடிப்படையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ உமாங் சிங்கார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.