அகமதாபாத்தில் 4மாடி கட்டடம் இடிந்துவிழுந்து விபத்து! - மீட்புப் பணிகள் தீவிரம்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், 4மாடி கட்டடம் இடிந்துவிழுந்தது. இந்த விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

கட்டடம்

PC : ANI

குஜராத் மாநிலம் அகமதாபாத்தின், ஒதவ் என்னும் இடத்தில் உள்ள 4மாடி கட்டடம் ஒன்று, யாரும் எதிர்பாராத நிலையில், திடீரென இடிந்துவிழுந்தது. இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் மற்றும் தேசியப் பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களில், இதுவரை 2பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துகுறித்து அகமதாபாத் மாநகராட்சி ஆணையர் விஜய் நெஹ்ரா கூறுகையில், ‘'இடிந்துவிழுந்த கட்டடம் குஜராத் வீட்டு வசதி வாரியத்தால் கடந்த 1999-ம் ஆண்டு கட்டப்பட்டது. கட்டடத்தில் விரிசல்கள் அதிகம் இருந்ததால், குடியிருக்கத் தகுதியற்றது என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக, இங்கு வசித்துவந்த 150-க்கும் மேற்பட்டோர் மாநகராட்சி ஊழியர்கள் துணையுடன் நேற்று வெளியேற்றப்பட்டனர். ஆனால், தங்களது உடைமைகளை எடுத்துவருவதற்காக 8 முதல் 10 பேர் இன்று மீண்டும் கட்டடத்துக்குள் சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது'’ என்று தெரிவித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!