‘தங்கல்’ பட நாயகி விவகாரத்தில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்! | Mumbai Police books man accused of molesting minor Bollywood star in flight

வெளியிடப்பட்ட நேரம்: 08:40 (27/08/2018)

கடைசி தொடர்பு:08:40 (27/08/2018)

‘தங்கல்’ பட நாயகி விவகாரத்தில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

தங்கல்

அமீர் கான் நடிப்பில், கடந்த ஆண்டு வெளியான படம் ‘தங்கல்’. இந்தப் படத்தில் அறிமுகமானவர் நடிகை சாயிரா வாசிம். இவர், கடந்த 8 மாதங்களுக்குப் முன்பு டெல்லியில் இருந்து மும்பைக்கு ‘ஏர் விஸ்ட்ரா’ விமானத்தில் பயணம்செய்தார். அப்போது, சக பயணியால் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகியுள்ளார். பின் இருக்கையில் அமர்ந்திருந்த நபர், நடிகையை பாலியல்ரீதியாகச் சீண்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சாயிரா, அதைத் தனது செல்போன் கேமராவில் ரெக்கார்ட் செய்துள்ளார். இவ்வளவு நடந்தும் விமான ஊழியர்கள் சாயிராவுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. இதனால் மனமுடைந்த சாயிரா, தனது இன்ஸ்ட்ராகிராமில் வருத்தத்துடன் வீடியோ பதிவிட்டார். இதையடுத்து, இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

இந்த நிலையில், நடிகை சாயிராவுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை மும்பை காவல்துறையினர் கைதுசெய்தனர். விமான நிறுவனம் அளித்த தகவலைக்கொண்டு விகாஸ் சச்தேவ் என்ற தொழிலதிபரைக் கைதுசெய்து வழக்குப்பதிவு செய்தனர். நடிகை சாயிரா 18வயது பூர்த்தியாகாதவர் என்பதால், கைதுசெய்யப்பட்டவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 8 மாதங்களுக்குப் பிறகு, தற்போது சாகர் காவல்துறையினர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்துள்ளனர்.