`நேரு அருங்காட்சியகத்தை எதுவும் செய்யாதீர்கள்' - மோடிக்குக் கடிதம் எழுதிய மன்மோகன் சிங்! | Former PM Manmohan Singh writes a letter to Prime Minister Narendra Modi

வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (28/08/2018)

கடைசி தொடர்பு:02:00 (28/08/2018)

`நேரு அருங்காட்சியகத்தை எதுவும் செய்யாதீர்கள்' - மோடிக்குக் கடிதம் எழுதிய மன்மோகன் சிங்!

முன்னாள் பிரதமர் நேரு நினைவிடத்தை எதுவும் செய்ய வேண்டாம் எனப் பிரதமர் மோடிக்கு மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார். 

மன்மோகன் சிங் - மோடி

டெல்லி டீன் முர்தி காம்பிளக்ஸில் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு நினைவாக நேரு நினைவு நூலகம் மற்றும் அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இதில் தற்போது அனைத்து பிரதமர்களையும் நினைவுகூரும் விதமாக அருங்காட்சியகம் அமைக்கத் திட்டமிட்டு அதற்கான பணிகளில் மத்திய அரசு இறங்கியுள்ளது எனக் கூறப்படுகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிரதமர் மோடிக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், ``நேரு அருங்காட்சியகத்தில் எந்தவிதமான மாற்றங்களும் செய்யக் கூடாது. நேரு காங்கிரஸுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் சொந்தக்காரர். நாட்டின் சுதந்திரத்துக்காக 10 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர். இந்தியாவின் முன்னேற்றத்துக்காக மட்டும் அவர் உழைக்கவில்லை. உலக அளவிலும் ஒரு தாக்கத்தை உண்டாக்கியவர். உலக அளவில் இந்தியாவை முன்னிறுத்தியவர். அவரது சாதனைகளை துடைக்க வேண்டும் என நினைக்கக்கூடாது.

அவருடைய பாரம்பர்யம், சாதனைகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக அந்த அருங்காட்சியகத்துக்கு எந்தவித இடையூறும் செய்யக்கூடாது. அதுவே, அவருக்கு நாம் செய்யும் மரியாதை. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அந்த நூலகத்தை மாற்ற முயற்சி செய்யவில்லை. ஆனால், தற்போதுள்ள அரசோ அவரது நூலகத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்பதை ஒரு கொள்கையாகவே கொண்டுள்ளது வருத்தமளிக்கிறது" எனக் கூறியுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க