வெள்ளம், நிலச்சரிவு பாதிப்பைப் பார்வையிட கேரளா சென்றார் ராகுல் காந்தி

கனமழையால் ஏற்பட்ட வெள்ளச் சேதத்தைப் பார்வையிட கேரளா சென்றுள்ளார், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. 

ராகுல் காந்தி

கேரளாவில், கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தென்மேற்குப் பருவமழை ருத்திர தாண்டவம் ஆடிவிட்டது. இதனால், ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் சுமார் ரூ.20,000 கோடி வரை சேதம் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உடைமைகளை இழந்து தவித்துவருகின்றனர். அண்டை மாநிலங்கள், உலக நாடுகள் எனப் பல தரப்பிலும் இருந்து கேரள மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படுகிறது

இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட செங்கன்னூர், ஆலப்புழா மற்றும் அங்கமாலி ஆகிய பகுதிகளை இன்று பார்வையிடுகிறார்.  திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு வந்த ராகுலை சசிதரூர் உள்ளிட்ட கேரள காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வரவேற்றனர். விமான நிலையத்தில் இருந்து நேராக செங்கன்னூர் சென்ற ராகுல், முகாமில் தங்கியுள்ள மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.  அதன் பிறகு, மீட்புப் பணிகளில் ஈடுபட்ட மீனவர்களைச் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!