`கிராமப்புற பொருளாதாரத்தை வாத்துகள் உயர்த்தும்!’ - திரிபுரா முதல்வரின் அடடே விளக்கம் | Biplab Kumar Deb said ducks will boost the rural economy

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (28/08/2018)

கடைசி தொடர்பு:20:00 (28/08/2018)

`கிராமப்புற பொருளாதாரத்தை வாத்துகள் உயர்த்தும்!’ - திரிபுரா முதல்வரின் அடடே விளக்கம்

திரிபுராவில் உள்ள கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்த மக்களிடையே வாத்துகளை விநியோகிக்க விரும்புவதாகக் கூறியுள்ளார் திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேப். 

திரிபுரா  முதல்வர்

பா.ஜ.க-வை சேர்ந்தவரான பிப்லப் குமார் தேப், திரிபுரா முதல்வராக அண்மையில் பதவியேற்றுக் கொண்டார். அதன் பின்னர், பொது நிகழ்ச்சியில் கலந்துவரும் அவர் சர்ச்சையாகப் பேசி எதிர்க்கட்சிகளின் விமர்சன வலையில் சிக்கி வருகிறார். முன்னதாக, மஹாபாரதம் காலத்திலேயே இணையதளம் இருந்தது எனக் கூறினார். தற்போது, மீண்டும் சர்ச்சையாகப் பேசி விமர்சனத்தில் சிக்கிக்கொண்டுள்ளார் பிப்லப் குமார் தேப். 

ருத்ராசாகர் பகுதியில் நடைபெற்ற படகுப்போட்டியைத் தொடங்கி வைத்துப் பேசிய பிப்லப் குமார் தேப், `ஏரியின் அருகில் வசித்து வரும் மீனவர்களுக்கு 50,000 வாத்துகளை அரசு வழங்கும். திரிபுரா முழுவதும் வெள்ள வாத்துகள் விநியோகிக்கப்படும். குறிப்பாக, நீர்நிலைகள் அருகே உள்ள சுற்றுலா தலங்களில், இயற்கை அழகை அதிகரிக்கவும் கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்தவும் வாத்துகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தண்ணீரில் வாத்துகள் நீந்தும்போது, தண்ணீரின் ஆக்சிஜன் அளவானது அதிகரிக்கும். தண்ணீரில் அதிகரிக்கும் ஆக்சிஜன் காரணமாக மீன்களுக்கு அடிப்படை ஆக்சிஜன் கிடைக்கும். இதனால், மீன்கள் வேகமாக வளரும். இதன் மூலம் மீனவர்கள் பயனடைவார்கள்' எனப் பேசியுள்ளார். 

இவரது பேச்சுக்கு, `எந்த விஞ்ஞான அடிப்படையும் இல்லாமல் பேசி வருகிறார்' என எதிர்க்கட்சியினர் மத்தியில் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.