வருமான வரி கணக்கு தாக்கல் - கேரளாவுக்கு 15 நாள்கள் கால நீட்டிப்பு!

ழையின் கோர வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்தவர்கள், வருமான வரி கணக்கு தாக்கல்செய்ய மேலும் 15 நாள்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

வருமான வரித்துறை

வருமான வரி கணக்கு தாக்கல்செய்ய நாடு முழுவதும் இந்த மாதம் 31-ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. வருமான வரி செலுத்த தகுதியானவர்கள் அனைவரும் வருமான வரி கணக்கை இந்த மாத இறுதிக்குள் தாக்கல்செய்தல் அவசியமாகும். இந்த நிலையில், கேரளாவுக்கு மட்டும் இதில் சற்று விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், கேரளாவில் பெய்த கனமழையால் அங்கு பெரும் வெள்ளம் கரைபுரண்டோடியது. இதனால் பலர் மடிந்தும், எண்ணற்றோர் வீடுகளை இழந்தும் துன்பத்தில் வாடிவருகின்றனர். இந்த வெள்ளத்தின் கோரத் தாண்டவத்திலிருந்து இன்றுவரை கேரளா இயல்புநிலைக்குத் திரும்பவில்லை. 

இந்த நிலையில், இந்த மாதம் 31-ம் தேதிக்குள் அனைவரும் வருமானவரி கணக்கை தாக்கல் செய்யவேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கேரளாவின் இழப்புகளையும், மக்கள் இயல்பு நிலைக்கு இன்னமும் திரும்பமுடியாமல் தவிப்பதையும் கருத்தில் கொண்டு, மேலும் 15 நாள்கள் கால அவகாசத்தை 'மத்திய நேரடி வரிகள் வாரியம்' கொடுத்துள்ளது. அதாவது, கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், வருமான வரி கணக்கை தாக்கல்செய்வதற்கான கடைசித் தேதி செப்டம்பர் 15 என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!