லாட்டரியில் விழுந்த ஒரு லட்ச ரூபாய்! கேரள நிவாரணத்துக்கு வழங்கிய ஹம்சாவுக்குக் குவியும் பாராட்டுகள் | Girl donates lottery amount of 1 Lakh to Kerala floods

வெளியிடப்பட்ட நேரம்: 10:32 (29/08/2018)

கடைசி தொடர்பு:10:32 (29/08/2018)

லாட்டரியில் விழுந்த ஒரு லட்ச ரூபாய்! கேரள நிவாரணத்துக்கு வழங்கிய ஹம்சாவுக்குக் குவியும் பாராட்டுகள்

லாட்டரி சீட்டில் விழுந்த ஒரு லட்ச ரூபாயை  வெள்ள நிவாரண நிதியாக அளித்த கொல்லத்தைச் சேர்ந்த ஹம்சாவுக்கு பாராட்டுகள் குவிந்துவருகிறது.

ஹம்சா

கேரள மாநிலத்தில், இந்த மாதம் 9-ம் தேதி தொடங்கிய இரண்டாம்கட்ட மழை காரணமாக 12 மாவட்டங்களில் கடுமையான அழிவு ஏற்பட்டது. இரண்டு வாரங்கள் தொடர்ச்சியாகப் பெய்த மழை காரணமாக, நிலச்சரிவு மற்றும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், 400 பேர் இறந்தனர். வீடு சேதம் அடைந்தவர்கள், தண்ணீரில் வீடுகள் மூழ்கியதால் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் முகாம்களில் தஞ்சம் புகுந்தனர். கேரளாவை மீண்டும் புனரமைக்க 2 ஆண்டுகள் வரை ஆகும் எனக் கூறப்படுகிறது. கேரளாவை மீட்டெடுக்க, மலையாள மக்கள் அனைவரும் தங்கள் ஒரு  மாத சம்பளத்தை வழங்க வேண்டும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மொத்தமாக வழங்க முடியாவிட்டாலும், ஒரு மாதம் மூன்று நாள் சம்பளம் வீதம், 10 மாதங்கள் வழங்கினாலும் போதும் என அறிவித்தார்.

கவர்னர் சதாசிவம்

இதை ஏற்று, கேரள ஆளுநர் சதாசிவம் தனது ஒரு மாத சம்பளத்தை ஒரே தவணையில் வழங்குவதாக அறிவித்தார். மேலும், முதல்வர் பினராயி விஜயனின் அழைப்பை ஏற்று, பலர் ஒரு மாத சம்பளத்தை வழங்க முன்வந்துள்ளனர். இந்த நிலையில், கொல்லத்தைச் சேர்ந்த ஹம்சா என்பவர், லாட்டரியில் தனக்கு விழுந்த ஒரு லட்சம் ரூபாயை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கி அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார். கடந்த 10-ம் தேதி நடந்த குலுக்கலில், ஒரு லட்ச ரூபாய் பரிசு ஹம்சாவுக்குக் கிடைத்துள்ளது. முதல்வர் பினராயி விஜயனை குடும்பத்தினருடன் நேரில் சந்தித்து, ஒரு லட்ச ரூபாய் பரிசுவிழுந்த லாட்டரி சீட்டை வழங்கினார். இதையடுத்து, ஹம்சாவுக்குப் பாராட்டுகள் குவிந்துள்ளன.