கேரளாவை புரட்டிப்போட்ட மழை: கூடியது சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் | Kerala Assembly Meeting began

வெளியிடப்பட்ட நேரம்: 11:12 (30/08/2018)

கடைசி தொடர்பு:13:36 (30/08/2018)

கேரளாவை புரட்டிப்போட்ட மழை: கூடியது சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம்

கேரளத்தில், மழை காரணமாக ஏற்பட்ட அதிதீவிர பேரிடர் குறித்து ஆலோசிப்பதற்காகக் கூட்டப்பட்ட சிறப்பு சட்டசபைக் கூட்டத்தில் கருணாநிதி, வாஜ்பாய் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

கேரளா

கேரள மாநிலத்தில் இரண்டு வாரங்களாகத் தொடர்ந்து பெய்துவந்த மழை காரணமாக 453 பேர் மரணம் அடைந்தனர். 12 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு  ஆகியவற்றால் வீடுகள் சேதமடைந்தன. கேரள மக்களால் பிரளயக்கெடுதி என வர்ணிக்கப்படும் அதிதீவிர பேரிடர் காரணமாக, அழகான கேரளம் அலங்கோலமானது. கேரளத்தை மீண்டும் புனரமைக்கும் பணியில் அம்மாநில அரசு ஈடுபட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் கேரளத்திற்கு உதவிசெய்து வருகின்றன. இந்த நிலையில் அதி தீவிர பேரிடர் குறித்து விவாதித்து முடிவுகள் எடுப்பதற்காக, இன்று காலை சிறப்பு சட்டசபைக் கூட்டம் தொடங்கியது.

கருணாநிதி

கூட்டத்தின் தொடக்கத்தில், மறைந்த முக்கியத் தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், லோக்சபா முன்னாள் ஸ்பீக்கர் சோம்நாத் சாட்டர்ஜி, தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி, கேரள முன்னாள் அமைச்சர் செர்க்களம் அப்துல்லா, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் மழை காரணமாக இறந்த 453 பேருக்கும் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில், மழையால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் பாதிப்புகளில் இருந்து மீண்டெழுவதுகுறித்து விவாதிக்கப்படுகிறது.