விவசாயிகளுக்கு ஏற்றிய குளுக்கோஸில் பூஞ்சைகள்! - இழப்பீடு கேட்டுப் போராடியதன் விளைவு?

த்தரப்பிரதேச மருத்துவமனையில் குளுக்கோஸ் பாட்டிலில் பூஞ்சைகள் இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குளுகோஸ்


உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது நிலம் கையகப்படுத்தியதற்கு, உரிய இழப்பீடு கோரி கடந்த 14 நாள்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினரின் சமாதான பேச்சுவார்த்தையை அடுத்து உண்ணாவிரதப் போராட்டத்தை அவர்கள் கைவிட்டனர். இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு குளுக்கோஸ் போடப்பட்டுள்ளது. அதில் பூஞ்சைகள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக விவசாயி ஒருவர் கூறுகையில், `` எங்கள் நிலத்துக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டோம். மாவட்ட நிர்வாகம் உறுதியளித்ததையடுத்து, 12.30 மணியளவில் போராட்டத்தைக் கைவிட்டோம். இதையடுத்து சஞ்சய் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டோம். அங்கு எங்களுக்கு குளுக்கோஸ் ஏற்பட்டது. அதில் ஒரு குளுக்கோஸ் பாட்டிலில் பூஞ்சைகள் நெளிந்துகொண்டிருந்தது. இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. உடனே புகார் செய்தோம். இதையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மாவட்ட அலுவலர்கள் வந்தனர். அவர்களும் எங்களது புகாருக்கு செவி சாய்க்கவில்லை” என்றார். 

இந்த விவகாரம் தொடர்பாக பேசிய மருத்துவ அதிகாரி ஒருவர் , `` இதுதொடர்பாக, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குளுக்கோஸ் பாட்டில் மோசமான நிலையில் இருந்ததாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். மொத்த குளுக்கோஸ் பாட்டில்களும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!