பியூன் வேலைக்கு முனைவர் பட்டம் பெற்ற 3,700 விண்ணப்பங்கள்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில், பியூன் பணிக்கான 62 காலியிடங்களுக்கு 93,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்தவர்களில், 3700 பேர் முனைவர் பட்டம் பெற்றவர்கள் என்று செய்தி வெளியாகி உள்ளது.

வேலை வாய்ப்பு


உத்தரப்பிரதேச மாநிலத்தில் காவல்துறையில் 62 மெஜேஞ்சர் பணிக்கு விளம்பரம் செய்திருந்தது. இந்தப் பணிக்குத் தகுதியாக ஐந்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் பணிக்கு 93,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்தவர்களில், 3,700 பேர் முனைவர் பட்டம் பெற்றவர்கள். 28,000 பேர் முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்கள். 50,000 பேர் பட்டதாரிகள். 

மெஜேஞ்சர் வேலை என்பது ஒரு அலுவலகத்தில் இருந்து இன்னொரு அலுவலகத்துக்குக் கடிதப் போக்குவரத்துகளை எடுத்துச் செல்ல வேண்டும். இதற்கு ஐந்தாம் வகுப்புடன் சைக்கிள் ஓட்டத்தெரிந்திருந்தால் போதும் என்று விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இந்தப் பணிக்கு அதிகம் படித்தவர்கள் போட்டி போடுவதால், எப்படித் தேர்வு செய்வது என்று திகைத்துள்ளது உத்தரப்பிரதேச பணியாளர் தேர்வாணையம். தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வில், அலுவலக உதவியாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு முனைவர் பட்டம் பெற்ற 992 பேர் விண்ணப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!