` தேசத் துரோகச் சட்டத்தை பிரிட்டனே நீக்கிவிட்டது!' - சட்ட ஆணையத்தின் பரிந்துரைகள் என்னென்ன? | Criticising Country Can't Be Treated As Sedition, Law Panel recommendations to central

வெளியிடப்பட்ட நேரம்: 18:05 (31/08/2018)

கடைசி தொடர்பு:18:05 (31/08/2018)

` தேசத் துரோகச் சட்டத்தை பிரிட்டனே நீக்கிவிட்டது!' - சட்ட ஆணையத்தின் பரிந்துரைகள் என்னென்ன?

'தேசத்துரோக சட்டம் 124 ஏ குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்' எனச் சட்ட ஆணையம் மத்திய அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது.  

தேசத் துரோகச் சட்டம்

தேசத்துரோக சட்டத்துக்கு எதிராக அவ்வப்போது குரல்கள் எழுந்தவண்ணம் உள்ளன. ஆளும் கட்சிகள் தேசத்துரோக சட்டம் 124ஏ பிரிவைத் தவறாகப் பயன்படுத்துகின்றன என்ற குற்றச்சாட்டுகளும் மனித உரிமை ஆர்வலர்களால் முன்வைக்கப்படுகிறது. இந்நிலையில், தேசத் துரோகச் சட்டம் குறித்து மத்திய சட்ட ஆணையம், மத்திய அரசுக்கு சில பரிந்துரைகளை அனுப்பியுள்ளது. அந்தப் பரிந்துரையில், ' சட்டப் பிரிவு 124ஏ குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். சுதந்திரமாக கருத்து கூறுவது என்பது அரசியல் சாசனத்தின்படி அடிப்படை உரிமையாகும். நாட்டில் இருக்கும் சில நடைமுறைகளை எதிர்த்துப் பேசுவதை தேசத் துரோகமாகப் பார்க்க முடியாது. 

மாற்றுக்கருத்து கொண்டிருப்பவர்களை ஏன் இந்தச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். மாற்றுக்கருத்து இருப்பது ஜனநாயகத்தின் ஒரு அங்கம்தான். ஆட்சியில் இருக்கும் அரசை, சட்டத்துக்குப் புறம்பாகவோ வன்முறையாலோ மாற்ற முயன்றால் தேசத்துரோக வழக்கைப் பதியலாம். இந்தச் சட்டத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்திய பிரிட்டிஷ் அரசே பத்து ஆண்டுகளுக்கு இதை நீக்கிவிட்டது. ஆனால், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இருக்கும் இந்தியா இன்னும் இந்தச் சட்டத்தைப் பின்பற்றி வருகிறது. எனவே, இதை மாற்றியமைக்கப் பரிசீலனை செய்ய வேண்டும். இந்தியாவின் இறையாண்மையைக் காப்பது முக்கியம். அது மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதிக்கும் வகையில் இருந்துவிடக்கூடாது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க