வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (01/09/2018)

கடைசி தொடர்பு:03:00 (01/09/2018)

பாதி விலைக்கு பெட்ரோல், டீசலை ஏற்றுமதி செய்யும் இந்தியா - ஆர்.டி.ஐ மூலம் அம்பலம்!

ந்தியா அரசு பெட்ரோல் மற்றும் டீசலை வெளிநாடுகளுக்கு, பாதி விலைக்கு ஏற்றுமதி செய்து வருகிறது என்ற உண்மை ஆர்.டி.ஐ. தகவல் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல்

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாளுக்கு நாள் சரசரவென ஏறிவருகிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூபாய் 81.58. அதுபோல டீசலின் ஒரு லிட்டர் விலை ரூபாய் 74.18. இன்னும் சில தினங்களில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை ரூபாய் 100 தாண்டும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகிறர்கள். இந்த நிலையில் இந்தியாவிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் வெளிநாடுகளுக்கு எவ்வளவு தொகையில் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பதை பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ரோகித் சப்ரவால் அறிய விரும்பினார்.

இதனால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தனது கேள்விகளை கேட்டு கடிதம் எழுதினர். இவர் கேட்ட கேள்விகளுக்கு தற்போது இந்திய அரசு பதில் அளித்துள்ளது. அதில் "மலேசியா, மொரிஷியஸ், சிங்கப்பூர், ஹாங்காங், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளுக்கு நடப்பு ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நாடுகளுக்கு பெட்ரோல் ரூபாய் 32 முதல் ரூபாய் 34 வரையிலும், டீசல் ரூபாய் 34 முதல் ரூபாய் 36 வரையிலும் ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. ஆர்.டி.ஐ தகவலின் மூலம் வெளிச்சத்துக்கு வந்த இந்த உண்மை இந்திய மக்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.