வருமான வரி கணக்கு தாக்கல்! - இந்த ஆண்டு வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வருமான வரித்துறை

வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய, கடந்த  ஜூலை 31-ந் தேதியை கடைசி நாளாக வருமான வரித்துறை அறிவித்திருந்தது. இதையடுத்து, ஆகஸ்ட் 31-ந் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது. அந்தக் கால அவகாசமும் நேற்றுடன் நிறைவடைந்தது. வருமானவரி கணக்கை நேற்று தாக்கல்செய்தோருக்கு அபராதக் கட்டணம் ஏதும் இல்லை. அப்படி செய்யத் தவறியவர்களுக்கு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 5 லட்சம் ரூபாய்க்குக் கீழ் வருமானம் இருப்போர், ரூ. 1,000 தாமதக் கட்டணமும், மொத்த வருமானம் ரூ.5 லட்சத்துக்கு அதிகமாக இருப்போர், டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்னதாகத் தாக்கல்செய்தால், தாமதக் கட்டணம் ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தக் காலகட்டத்துக்குப் பிறகு வருமான வரி கணக்கை தாக்கல்செய்ய முடியாது. இந்நிலையில், வருமான வரி கணக்குகளைத் தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று, பெரும்பாலானோர் இணையதளம் மூலம் தாக்கல் செய்துள்ளனர்.  நடப்பாண்டைப் பொறுத்தவரை மொத்தம் 5.29 கோடிக்கு வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், இது கடந்த ஆண்டை விட 60 சதவிகிதம் அதிகம் எனவும் தகவல்  தெரிவிக்கிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்தில் வருமான வரி கணக்குகள் தாக்கல்செய்ய செப்டம்பர் 15-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!