1.2 கோடி டன் குப்பைகள் குவிந்துகிடக்கும் காஸிபூர்! டெல்லி மாநகராட்சியின் அலட்சியம்

இந்தியத் தலைநகரின் மக்கள்தொகை அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது. முன்பைவிட, 1.3 சதவிகித கழிவுகளை அதிகமாக உற்பத்தி செய்கிறது டெல்லி. மாநகராட்சி ஆணையம், கழிவுகளைத் தொடர்ச்சியாகக் குவித்துக்கொண்டுதான் இருக்கிறது. காஸிபூர், குப்பை குவிக்கும் பகுதியாக மாறிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. 1500 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட அந்தப் பகுதி முழுவதும் தற்போது  குப்பை சூழ்ந்த பகுதியாக மாறிவிட்டது. சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் கொட்டப்பட்டிருக்கும் குப்பைகள், அப்புறப்படுத்தப்படாமலும் மேற்கொண்டு சேர்ந்துகொண்டும் இருக்கிறது. அங்கு, தற்போது 1.2 கோடி டன்கள் அளவிலான குப்பைகள் குவிந்துகிடக்கின்றன.

குப்பைகள்

Photo Courtesy: Chandan Khanna/AFP

 அங்கு குவியும் குப்பைகளை அப்புறப்படுத்த எந்த மாற்றுவழியையும் சிந்திக்காமல் மெத்தனமாக இருக்கிறது, டெல்லி மாநகராட்சி நிர்வாகம். அது மட்டுமின்றி, டெல்லி நிர்வாகம் தற்போது மோசமான பொருளாதாரச் சிக்கல்களைச் சந்தித்து வருவதும் முறையான திட்டங்களைச் செயல்படுத்த முடியாமல் போவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். எது எப்படியிருப்பினும், தொடர்ச்சியாக வளர்ந்து கொண்டேயிருக்கும் காஸிபூரில் உள்ள குப்பைமேட்டின் தற்போதைய உயரம் 65 மீட்டர்கள். அதாவது குதுப்மினாரைவிட 8 மீட்டர் மட்டுமே குறைவு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!