சமணத் துறவி தருண் சாஹர் காலமானார்! - பிரதமர் இரங்கல்

டெல்லியைச் சேர்ந்த சமணத் துறவி தருண் சாஹர், உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார். அவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

துறவி

தருண் சாஹர், கடந்த 14 நாள்களாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மிகவும் அவதிப்பட்டுவந்தார். உடல்நிலை மிகவும் மோசமானதை அடுத்து, கடந்த புதன்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மூன்று நாள்கள் தீவிர சிகிச்சையில் இருந்த தருண் சாஹர், இன்று காலை உயிரிழந்தார்.  இவர், தனது ‘கட்வே ப்ரவசன்’ என்னும் விரிவுரைத் தொடர்மூலம் உலக அளவில் மிகவும் பிரசித்திபெற்றவர். 

இவரின் இறப்புக்கு, தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுபற்றி ட்விட்டரில் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, “தருண் சாஹரின் எதிர்பாராத இறப்பு வருத்தமளிக்கிறது. அவரின் சிறந்த கருத்துகளை எப்போதும் மறக்க முடியாது. அவருடைய வார்த்தைகள் மக்களை என்றும் ஊக்குவிக்கும். அவரை இழந்து வாடும் சமண சமூகத்தாருக்கும், அவரின் எண்ணற்ற சீடர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “தருண் சாஹரின் இறப்பு எதிர்பார்க்காத ஒன்று. இறப்புச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன்” எனப் பதிவிட்டுள்ளார். 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!