உச்ச நீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதிக்கு ரஞ்சன் கோகாய் பெயர் பரிந்துரை!

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி பொறுப்புக்கு மூத்த நீதிபதி ரஞ்சன் கோகாயின் பெயரை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பரிந்துரை செய்துள்ளார். 

ரஞ்சன் கோகாய்

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா இருந்துவருகிறார். அவர் அக்டோபர் 2-ம் தேதியுடன் ஓய்வுபெறுகிறார். நீதித்துறை மரபுப்படி, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருப்பவர், அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை பரிந்துரைக்க வேண்டும். அதனடிப்படையில் முடிவெடுக்கப்படும். 

தீபக் மிஸ்ராவின் பரிந்துரையை மத்திய சட்ட அமைச்சகம் ஏற்கும் நிலையில், உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கான பதவிக் காலம் நவம்பர் 2019 வரை உள்ளது. உச்ச நீதிமன்ற செயல்பாடுகள் குறித்து, இந்த ஆண்டின் தொடக்கத்தில் 4 நீதிபதிகள் செய்தியாளர்கள் முன்னிலையில் அதிருப்தி தெரிவித்திருந்தனர். அதில், ரஞ்சன் கோகாயும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!