ரயிலில் ஏற்பட்ட பிரசவ வலி - நடைமேடையிலேயே குழந்தையை பெற்றெடுத்த கர்ப்பிணிப் பெண்!

ரயிலில் பயணம் செய்யும் போது, திடீரென ஏற்பட்ட பிரசவ வலியால், நடைமேடையில், பெண் ஒருவர் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

ரயிலில் பிரசவம்


புஷ்பக எக்ஸ்பிரஸ் ரயிலில், காஞ்சனா தேவி என்ற 27வயதுடைய கர்ப்பிணிப் பெண் பயணம் செய்துள்ளார். மும்பையிலிருந்து லக்னோ நோக்கி செல்லும் அந்த ரயில், பூசாவல் ரெயில் நிலையத்திற்கு வந்தபொழுது அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் காஞ்சனா தேவி பிரசவ வலியால் துடித்துள்ளார். இதைக்கண்டு, அருகிலிருந்த சக பெண் பயணிகள் அவருக்கு உதவி செய்ய முன்வந்தனர்.  அவரை ரயில் பெட்டியில் இருந்து வெளியே அழைத்து வந்தனர்.  அங்கிருந்த டிக்கெட் பரிசோதகரிடம் இது குறித்து தெரிவித்துள்ளனர். இதைக்கேட்ட டிக்கெட் பரிசோதகர், ரயில்வே மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கு உடனடியாக அழைப்பு விடுத்துள்ளார். இதனிடையே லிப்ட் ஒன்றில் கர்ப்பிணியான காஞ்சனாவை ஏற்ற பயணிகள் முயற்சித்து உள்ளனர்.  அப்போது, நடைமேடையிலேயே காஞ்சனாவுக்கு பிரசவம் நிகழ்ந்து விட்டது. இதையடுத்து அவர்,  உள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தாயும், சேயும் நலமுடன் உள்ளதாக, அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!